Sunday 21 September, 2008

எழுத அவா

எழுத வேண்டும் என்ற அவா நம்மில் பலருக்கு உண்டு. நான் மட்டும் அதற்க்கு விதி விலக்கு அல்ல. பத்திரிக்கைகளுக்கு எழுதினால் திரும்ப வரும் பயம். இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அலி பாபாவின் அற்புத விளக்கு போல் எனக்கு கிடைத்தது
இந்த வலைப்பூ. அது மட்டும் அல்ல நான் சேர்ந்திருக்கும் குழுமங்களால் நிறைய நல்ல வலைப்பூக்களின்
அறிமுகமும் ஆகியிருக்கிறது.
முத்துச்சரம் என்று ஒரு வலைப்பூ. பெயரன் எடுத்த ஒரு மூதாட்டி எழுதுகிறார், ரசமாக இருக்கிறது. இந்த வலைப்பூவை எனக்கு அறிமுகப்படுத்திய பண்புடன் குழுவினர்க்கு எனது நன்றி. நாம் எழுதுவது வெறும் வார்த்தைகளை மட்டும் இருக்கக் கூடாது, அவை நமது உணர்ச்சிகளை படிப்பவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று முத்துச்சரம் எனக்கு உணர்த்தியது. எனது தமிழ் இன்னும் மூன்றாம் வகுப்பு நிலையில் உள்ளது என்பதனை என் குழுமத்தின் தமிழை படித்தபின் உணர்கிறேன். என் தமிழ் நன்கு வளர்ந்து கொண்டிருக்குறது. நன்றி நண்பர்களே....


2 comments:

ராமலக்ஷ்மி said...

மகன் இப்போதுதான் பள்ளி இறுதியாண்டில். ஆகையால் அம்மையார் ஓகே! பெயரன் எடுத்த மூதாட்டி:)))!?! சரி எப்படியானால் என்ன? எனது வலைப்பூ தங்களுக்குப் பிடித்திருப்பது சந்தோஷத்துக்குரிய விஷயம்:)! நன்றி.

mynah said...

தோப்புக்கரணம் 108 போட்டுவிட்டேன் சரியா? நான் வலையுலகத்துக்குப் புதியவள். உங்கள் ப்லாக் போன கையோடு, நாநானி என்ற ப்லாக் சென்றேன். அதுவும் உங்களுடைய ப்லாக் என்று தவறுதலாய்.... ரொம்ப சாரி ராமலக்ஷ்மி.